தேனியில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து வணிகர்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தும், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பெற்று வருகின்றனர். அதன்படி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தேனியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இக்குழுவில் இடம்பெற்றுள்ள தி.மு.க.பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் எம்.பி.க்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதில், ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கை தொடர்பான தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்களை மொத்தமாக சேகரித்து இந்த குழுவினர் எடுத்துச் சென்றனர். இந்த கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க் கள் சரவணக்குமார், மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story