ராயக்கோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


ராயக்கோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2021 7:27 PM IST (Updated: 1 Jan 2021 7:27 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. அதே போல் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த செண்பகவள்ளி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செண்பகவல்லியின் தாய் மாரம்மா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story