திருச்செங்கோட்டில் தறிப்பட்டறையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோட்டில் தறிப்பட்டறையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 64). இவர் கடந்த 20 வருடங்களாக பாலசுப்பிரமணியம் என்பவரது தறிப்பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இவரது மனைவி அமிர்தம் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், எனது கணவர் சுப்பிரமணி வீட்டு செலவிற்காக விசைத்தறி உரிமையாளர் பாலசுப்பிரமணியத்திடம் பணம் வாங்கி இருந்ததாகவும், அந்த பணத்தை தரச்சொல்லி கேட்டதால் மன உளைச்சலில் அவர் வேலை பார்க்கும் தறிப்பட்டறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில் திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன சுப்பிரமணியத்துக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story