புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டார தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் கணேசன் வரவேற்றார். மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ஆரோக்கியராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி வட்டார தலைவராக கலைச்செல்வி, செயலராக கணேசன், பொருளாளராக பிரபாகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக வேணுகோபால், பஞ்சுராஜ், அசோக்பாரதி, திருமுருகன், வட்டார துணைத்தலைவர்களாக இந்திராகாந்தி, மீனாட்சி, சுரேஷ் ஜான் தாமஸ், வட்டார துணை செயலராக சத்தியராஜ், சங்கரலிங்கம், சாந்தா மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை உடனே ரத்து செய்திட வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்களைக்கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும். உள்ளிட்ட பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டாரப்பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story