கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


கடையநல்லூர் அருகே காசிதர்மத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்த போது எடுத்த படம்
x
கடையநல்லூர் அருகே காசிதர்மத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்த போது எடுத்த படம்
தினத்தந்தி 2 Jan 2021 6:32 AM IST (Updated: 2 Jan 2021 6:32 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

மினி கிளினிக்
கடையநல்லூர் தாலுகா காசிதர்மம், செங்கோட்டை தாலுகா கிளாங்காடு ஆகிய கிராமங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ்ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலுசிவலிங்கம், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆனைகுட்டி பாண்டியன், கடையநல்லூர் நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர்
வீரசிகாமணி, நெற்கட்டும்செவல் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் சமீரன், வடக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் சீமான் மணிகண்டன், புளியங்குடி நகர ெசயலாளர் பரமேஸ்வரபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கையெழுத்து இயக்கம்
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ‘தி.மு.க.வை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம்’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் புளியரை தட்சிணாமூர்த்தி கோவில் அருகில் தொடங்கியது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். இதில் மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன், அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளா் சிவ ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story