புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி


புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி
x
தினத்தந்தி 2 Jan 2021 6:44 AM IST (Updated: 2 Jan 2021 6:44 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.

மும்பை, 

இங்கிலாந்து நாட்டு புதுவகை கொரோனா பரவல் காரணமாக மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் புத்தாண்டை அவரவர் வீடுகளில் கொண்டாடும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மும்பை கார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதில் அதே கட்டிடத்தில் வசித்து வந்த ஜான்வி (வயது21) என்ற இளம்பெண் கலந்துகொண்டு இருந்தார்

அவருடன் கல்லூரி மாணவிகள் 3 பேரும் கலந்துகொண்டனர். அப்போது அங்கிருந்த தம்பதிக்கும், அவர்களுக்கிடையே சிறு பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டனர். இதன் காரணமாக ஜான்வி தடுமாறி மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ஜான்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜான்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story