மே மாதம் வரை பதவி காலம் உள்ள நிலையில் கவர்னர் கிரண்பெடி மாற்றமா?
மே மாதம் வரை பதவிக்காலம் உள்ள நிலையில் கவர்னர் கிரண்பெடி மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தின் கவர்னராக கிரண்பெடி கடந்த 29.5.2016-ம் ஆண்டு பதவியேற்றார். யூனியன் பிரதேச கவர்னர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் தான். அதன்படி புதுவையின் கவர்னராக கவர்னர் கிரண்பெடி பொறுப்பு ஏற்று வருகிற மே மாதத்துடன் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைகிறது.
இதற்கிடையே மத்திய அரசு புதுவைக்கு புதிய கவர்னரை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் புதிய கவர்னர் நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வட்டாரத்தில் கேட்டபோது, ‘கவர்னர் கிரண்பெடி பதவி காலம் முடிவதற்கு மே மாதம் இறுதி வரை உள்ளது. எனவே கவர்னர் மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை’ என கூறினர்.
Related Tags :
Next Story