பொன்னை அருகே, விவசாய நிலங்களுக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் - கரும்புகளை நாசம் செய்தன
பொன்னை அருகே ஆந்திர வனப்பகுதியில் இருந்து வந்த 3 காட்டு யானைகள் கரும்பு பயிர்களை நாசம் செய்தன.
திருவலம்,
ஆந்திர மாநிலம் பொம்ம சமுத்திரம் காட்டுப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள், நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள தெங்கால் பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்தது. விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்பு உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்தன.. இதையடுத்து விவசாயிகள் யானையை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் பார்கவ் தேஜா, மற்றும் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நேற்று காலை முதல் இரவு வரை பட்டாசு வெடித்தும், தண்டோரா மூலம் சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். யானைகளை விரட்டியடிக்கும் பணியில் இரு மாநில வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வந்து, தங்கள் பயிர்களை நாசம் செய்வதாக, தெங்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story