வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்


வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2021 8:32 PM IST (Updated: 2 Jan 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர், வக்கீல் இளங்கோ தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெங்களூரு சாலை வழியாக ஊர்வலமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாணிக்கம், தொழிற்சங்க மண்டல பொருளாளர் மாதப்பன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சென்றாயப்பன், மகேந்திரன் வேலு, சின்னசாமி, பீமன், திருப்பதி, முருகன், செல்வக்குமார்,துணை தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் பச்சையப்பன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பாரதி, ராதாமணி, மகேஸ்வரி, தொழிற்சங்க பொறுப்பாளர்கள் ராஜேஷ், வேலு, ஒன்றிய தலைவர் சீனிவாசன், ராமசந்திரன், நகர செயலாளர் கோவிந்தராஜ், இளைஞரனி செந்தில்குமார், தினேஷ், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் பாடி செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், சீனிவாஷ், மாவட்ட அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மஞ்சுநாதன், மாவட்ட துணை செயலாளர் காடு பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சுபராணி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் நகர செயலாளர் வெங்கட்டாசலம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடந்தது. முன்னதாக வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்ைககளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

இந்த போராட்டத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பொன்னப்பன், மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட அவை தலைவர் மஞ்சுநாத், நிர்வாகிகள் ராஜ்குமார், பழனி, பாஸ்கர், திருவேந்திரன் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு தலைவரும், பா.ம.க. மாநில துணை அமைப்பு செயலாளருமான மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் திருப்பதி கவுண்டர், பரசுராமன், அனுமுத்தன், தமிழ்சங்கர், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Next Story