அறந்தாங்கி பகுதியில் நெற்பயிரில் நோய் தாக்குதல்; விவசாயிகள் கவலை
அறந்தாங்கி பகுதியில் நெற்பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் வடகாடு பகுதியில் மக்காச்சோளம் பயிர் சேதம் அடைந்துள்ளன.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே அரசர்குளம், நாகுடி, ஆளப்பிறந்தான், இடையார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள நெற்பயிர்களில் வேரழுகல் நோய் ஏற்பட்டது மட்டுமின்றி பூச்சி தாக்குதலும் காணப்படுகிறது. இதன்காரணமாக விவசாயிகளுகள் கடும் நஷ்டம் அடைந்ததுடன், மனவேதனை அடைந்துள்ளனர். பல நாட்கள் வயலில் கிடந்து நாற்றுநடுதல், களை எடுத்தல், உரமிடுதல் என பல வேலைகள் செய்தும் பலன்கிடைக்கவில்லையே என்று வருத்தம் அடைந்துள்ளனர்.
நஷ்ட ஈடு
இது குறித்து இடையாரை சேர்ந்த விவசாயி சுப்பம்மாள் கூறும்போது, இடையார் பகுதியில் பயிரில் பூச்சி தாக்குதல் காணப்பட்டு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் வேரழுகல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விவசாய பணிக்கு செலவு செய்தும் ஒன்றும் கிடைக்காததால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மக்காச்சோளம்
வடகாடு பகுதியில், மானாவாரியாக மக்காச்கோளம் பயிரிடப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால், இந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவைகள் பறவைகள், அணிகளுக்கு உணவாகின.
தற்போது, மழை விட்டநிலையில் சோளக்கதிர்களை அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் பாதி சோளக்கதிர்கள் கூட கிடைக்கவில்லை. அவைகள் அழுகி சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story