மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது
மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது.
மும்பை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்ட நிலையில், அடுத்த கட்டமாக அந்த வைரசுக்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடும் பணிக்கு இந்தியா தயாராகி வருகிறது.
முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இந்த பிரமாண்ட பணியை எந்த பிரச்சினையும் இன்றி நேர்த்தியாக செய்து முடிப்பதற்காக நேற்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மராட்டியத்தில் மும்பை தவிர புனே, நாக்பூர், ஜல்னா, நந்துர்பர் ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதற்காக அமைக்கப்பட்ட ஒவ்வொரு மையங்களிலும் 25 பேருக்கு தடுப்பூசி போடுவது போல ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.
ஜல்னாவில் மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே தடுப்பூசி ஒத்திகை பணியை நேரில் பார்வையிட்டார். புனேயில் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தேஷ்முக் பார்வையிட்டு ஒத்திகை வெற்றிகரமாக நடப்பதை உறுதி செய்தார்.
தடுப்பூசி போடும் பணியின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும், பிற அம்சங்களும் அடையாளம் காணப்பட்டன. ஒத்திகை மராட்டியத்தில் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story