திருமழிசை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை
திருமழிசை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி ஒத்திகை
திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா நோய் தடுப்பூசி் ஒத்திகை நடைபெற்றது. 25 மருத்துவ பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
ஒவ்வொரு நபருக்கும் 45 நிமிடங்கள் இந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை செய்யப்பட்டது. முதலில் தடுப்பூசி அலுவலராக நியமிக்கப்பட்ட போலீஸ் துறையை சேர்ந்தவர் அடையாள அட்டையை சரி பார்த்த பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கிறார். அங்கு சுகாதார ஆய்வாளர் ஆன்லைனில் விவரங்களை சரி பார்த்த பின்னர் தடுப்பூசியாளர் தடுப்பூசி போடுவது போன்ற ஒத்திகை நடைபெற்றது. ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருந்து அங்கு நோயாளிக்கு பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுகி்றதா என்பது குறித்தும், அப்படி பின் விளைவுகள் ஏற்பட்டால் முதலுதவி செய்து உடனடியாக மருத்துவ கல்லூரிக்கு அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது. அரை மணி நேரம் கழித்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் வீட்டுக்கு அனுப்புவதற்காக இந்த ஒத்திகை நடைபெற்றது.
ஆய்வு
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகையை உலக சுகாதார நிறுவன கண்காணிப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரநாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யசோதா, சித்த மருத்துவர் செந்தில்குமார், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சங்கரி, மாவட்ட மலேரிய அலுவலர் முருகன், சுகாதார நல அலுவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல நேமம் பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு மையத்தில் 25 நபர்கள் என திருமழிசை மற்றும் நேமம் என 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 நபர்களுக்கு முதல்கட்டமாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story