குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2021 12:27 AM GMT (Updated: 3 Jan 2021 12:27 AM GMT)

குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் குளித்தலை - மணப்பாறை சாலையில் குளித்தலை அருகேயுள்ள மேலமைலாடி பஸ் நிறுத்தம் உள்ள பகுதி வழியாகச் செல்லும் இந்த குடிநீர் குழாயில் சிறிய அளவிலான உடைப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணில் புதைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையோரமாக சென்று கொண்டிருக்கிறது. பல நாட்களாக தண்ணீர் கசிந்து செல்வதால் குடிநீர் வீணாகிவருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த குடிநீர் குழாயில் தற்போது சிறிய அளவில் ஏற்பட்டுள்ள கசிவு, நாளடைவில் அதிகப்படியாக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் அதிகப்படியான தண்ணீர் வீணாவதோடு, மற்ற பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story