வழிவிடுமாறு கூறியதால் தகராறு; லாரி உரிமையாளருக்கு அடி-உதை


வழிவிடுமாறு கூறியதால் தகராறு; லாரி உரிமையாளருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 3 Jan 2021 6:47 AM IST (Updated: 3 Jan 2021 6:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி மகேஷ் (வயது 35). இவர் சொந்தமாக 2 லாரிகளை வைத்து மணல், ஜல்லி வினியோகம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு திருநீர்மலை மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது 4 பேர் வழியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் வழிவிடுமாறு அந்தோணி மகேஷ் கூறினார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அந்தோணி மகேசை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் முகத்தில் காயமடைந்த அவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநீர்மலையை சேர்ந்த கிருபைநாதன் (22), சரவணன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறை வாக உள்ள ரூபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story