மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள், அழுகிய பயிர்களுடன் வந்து தப்படித்து ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து தப்படித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்களுடன் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து தப்படித்தும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமசாமி, நெடுமாறன், பக்கிரிசாமி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ரூ.32 ஆயிரம் நிவாரணம்
புயல், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.32 ஆயிரம் உடனடியாக நிவாரணம் வழங்க கோரியும், வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் காரணமாக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story