தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் வினியோகம்: பொங்கல் பரிசு வழங்க ரூ.167 கோடி ஒதுக்கீடு
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க ரூ.167 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்,
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இதனை தொடங்கி வைத்தார். மேலும் சர்க்கரை, முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பும், முழு கரும்பு ஒன்றும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 67 ஆயிரத்து 941 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பரிசு தொகுப்புகள் பைகளில் ‘பேக்கிங்’ செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரூ.167 கோடி ஒதுக்கீடு
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 9 தாலுகாக்கள் உள்ளன. இந்த 9 தாலுகாக்களிலும் மொத்தம் உள்ள 1,185 ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 941 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க ரூ.166 கோடியே 98 லட்சத்து 52 ஆயிரத்து 500 அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுகரும்பு வழங்க லாரிகளில் கரும்பு லோடுகள் நேற்று தஞ்சை மாவட்டத்திற்கு வந்தது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் இருந்த கரும்புகள் வெட்டி எடுக்கப்பட்டு டிராக்டர், மினி லாரிகளில் தஞ்சைக்கு எடுத்துவரப்பட்டு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
நாளை முதல் வினியோகம்
இது குறித்து கூட்டுறவுதுறை அதிகாரிகள் கூறுகையில், நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின்படி ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளைக்கும் 200 பேருக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதியில் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் 13-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம்’’ என்றனர்.

Related Tags :
Next Story