காதலை கைவிட்டதால் ஆத்திரம் இளம்பெண்ணை வாளால் வெட்டிய வாலிபர்


காதலை கைவிட்டதால் ஆத்திரம் இளம்பெண்ணை வாளால் வெட்டிய வாலிபர்
x
தினத்தந்தி 4 Jan 2021 4:14 AM IST (Updated: 4 Jan 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

தன்னுடனான காதலை கைவிட்டதால் இளம்பெண்ணை வாளால் வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

பீட் சிட்டி பகுதியை சேர்ந்தவர் போபட் பாப்டே. இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் போபட் பாப்டேவின் நடவடிக்கை பிடிக்காததால் இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடனான காதலை கைவிட்டார். மேலும் அவருடன் பேசுவதை நிறுத்தினர்.

இதைதொடர்ந்து இளம்பெண்ணை சந்தித்து பேச அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து போபட் பாப்டே இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது தன்னுடனான காதலை துண்டித்ததற்கு அவர் காரணம் கேட்டு உள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போபட் பாப்டே தான் கொண்டு வந்திருந்த வாளால் இளம்பெண்ணை சரமாரியாக வெட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

மேலும் புகாரின் பேரில் இளம் பெண்ணை வெட்டிய போபட் பாப்டேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story