நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 1 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 1 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 328-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 211 பேர் இறந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 285 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 71 பேர் வீடு திரும்பி உள்ளனர். 56 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 158 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 101 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 873 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 87 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story