கொரோனா தடுப்பூசிகள் வைக்க குளிர்சாதன பெட்டிகள் சேலத்திற்கு கொண்டு வரப்பட்டன
சேலத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.
சேலம்,
நாடு முழுவதும் கொரோனா வைரசால் மக்கள் போராடிக்கொண்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அடுத்த கட்டமாக கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 5 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
குளிர்சாதன பெட்டிகள்
அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன பெட்டிகள் நேற்று சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை துணை இயக்குனர் செல்வகுமார் பெற்றுக்கொண்டார்.
களப்பணியாளர்கள்
இதுகுறித்து அவர் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக 80 குளிர்சாதன பெட்டிகள் வந்து உள்ளன. அதில் சேலம் மாவட்டத்திற்கு 33 குளிர்சாதன பெட்டிகளும், நாமக்கல் மாவட்டத்திற்கு 25 பெட்டிகளும், அதேபோன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 11 பெட்டிகளும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த குளிர்சாதன பெட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டுமல்லாமல், போலியோ தடுப்பூசிகளும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பயன்படும். எனவே அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தவுடன் முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். தொடர்ந்து வரத்துக்கு ஏற்றாற்போல் பொதுமக்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும், என்றார்.

Related Tags :
Next Story