கரூரில் வேளாண்மை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்


கரூரில் வேளாண்மை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 5 Jan 2021 6:45 AM IST (Updated: 5 Jan 2021 6:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலகர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் பணிபுரியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கள் பணியிட மாற்றம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தடை ஆணையை அமல்படுத்தக்கோரி நேற்று கரூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலகர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட சங்கம் சார்பில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். இதில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

Next Story