வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏர்கலப்பையுடன் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏர்கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் புலிவலத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏர் கலப்பையை கைகளில் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சாலை, கடைவீதி வழியாக திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.
ஆர்ப்பாட்டம்
பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது சலாவூதீன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய தலைவர் சுந்தரய்யா, ஒன்றிய செயலாளர் கோசிமணி, மாவட்டக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய பொருளாளர் வானதீபன், நகரக்குழு உறுப்பினர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story