வாய்மேடு, திருமருகல் பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டம் தி.மு.க. சார்பில் நடந்தது
வாய்மேடு, திருமருகல் பகுதிகளில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வாய்மேடு,
தலைஞாயிறை அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் வரவேற்றார். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்த பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து கூறினர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், வக்கீல் ஜெய்சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, கூட்டுறவு சங்க இயக்குனர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திவாஸ்கர், துணைப் அமைப்பாளர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
பன்னாள் ஊராட்சி
இதேபோல் வாய்மேட்டை அடுத்த பன்னாள் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாலு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயம் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்குஊராட்சியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொட்டாரக்குடி ஊராட்சி
திருமருகல் தெற்கு ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் தி.மு.க. மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரிபாயா யாசின் வரவேற்றார். இதில் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் அண்ணாதுரை, துணை அமைப்பாளர் தங்கதுரை, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பார்த்திபன், பொன் அழகிரி, ராமராஜன், வர்த்தகர் அணி செயலாளர் ரஜினி, தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 20 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். முடிவில் ஊராட்சி கழக செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story