நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500-பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500-பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2021 8:59 AM IST (Updated: 5 Jan 2021 8:59 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் குடும்ப அட்ைடதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி, திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பழனிக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்ககதிரவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவா, வேளாண் விற்பனை குழு உறுப்பினர்கள் முரளி, மீனா, கூட்டுறவு சங்களின் இணை பதிவாளர் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பனங்குடி

திருமருகல் அருகே பனங்குடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜ் வரவேற்றார். கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார்.

இதில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி, உதவி கலெக்டர் இந்துமதி, நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பக்கிரிசாமி, திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அப்துல் பாசித், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோதினி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு

தலைஞாயிறில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அவை.பாலசுப்ரமணியன், வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story