தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்பு


தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Jan 2021 10:33 AM IST (Updated: 5 Jan 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலிராஜேந்திரன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, விடியலைநோக்கி ஸ்டாலினின்குரல் பிரசார பயணத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்குவருகிற 8, 9-ந் தேதிகளில் வருகை தரும் இளைஞர் அணி செயலாளர்உதயநிதிஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது மற்றும் பிரசார கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில்தீர்மானக் குழுச் செயலாளர் ஏ.ஜி.சம்பத், மாநிலமருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் லட்சுமணன், விவசாய அணி துணைச் செயலாளர் அன்னியூர் சிவா மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story