நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2021 11:45 AM IST (Updated: 5 Jan 2021 11:45 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளி திடீரென உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நெய்வேலி,

நெய்வேலி ஏ பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் அந்தோணி மகன் செல்வராஜ் (வயது 50). என்.எல்.சி. நிறுவனத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்து வந்தார். நேற்று காலை, என்.எல்.சி.க்கு முதற்கட்ட பணிக்கு சென்ற செல்வராஜ், திடீரென மயங்கி விழுந்தார். தொடாந்து, என்.எல்.சி. பொது மருத்துவமனைனக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இழப்பீடு

இது குறித்து தகவலறிந்த செல்வராஜின் உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சன். முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், ஆறுமுகம், வானதி ராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், நெய்வேலி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஸ்டீபன், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் திலகர், இன் கோசர்வ் சொசைட்டி தலைவர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் என்.எல.சி். பொது மேலாளர் ஜோசப் ரோஸ், முதன்மை பொது மேலாளர் பெருமாள்சாமி, பொது மேலாளர் பாரதி ஆகியோரை சந்தித்து, உயிரிழந்த செல்வராஜ் குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரத் தன்மை உள்ள வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இ வர்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை.

மறியல் போராட்டம்

இதையடுத்து, அவர்கள் இழப்பீட, நிரந்தரன தன்மையுடைய வேலை வழங்கினால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து இன்று, சுரங்கம் 1 ஏ முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Next Story