சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரேஷன் கடை விற்பனையாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு


சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரேஷன் கடை விற்பனையாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
x
தினத்தந்தி 5 Jan 2021 7:06 PM IST (Updated: 5 Jan 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன்கடை விற்பனையாளர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பூச்செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். புத்தாண்டு அன்று இரவு 7 மணியளவில் உறவினரிடம் பூ கொடுத்து விட்டு வருமாறு சிறுமியிடம் தாய் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி பூ கொடுக்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஓஜிஅள்ளி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் கணேசன் (வயது 55) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் கூறினாள். இதனையடுத்து சிறுமியின் தாயார் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை விற்பனையாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story