தனுஷ்கோடி பகுதியில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்
தனுஷ்கோடி பகுதியில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 9 மாதத்திற்கு மேலாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் செயல்பட்டு வரும் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 65 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 9 மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தனுஷ்கோடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் 6 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று பாடம் கற்பித்துக் கொடுத்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் தலைமையில் 6 ஆசிரியர்கள் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொடுத்து வருவதால் அந்த பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் மாணவ- மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பாடம் படித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story