புதுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி: 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


புதுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி: 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 6 Jan 2021 6:53 AM IST (Updated: 6 Jan 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணிக்காக செம்பட்டு பகுதியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

செம்பட்டு,

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் டி.வி.எஸ். டோல்கேட் முதல் மாத்தூர் அருகே உள்ள சுற்றுவட்ட சாலை வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதில் மாத்தூர் சுற்றுவட்ட சாலை முதல் குண்டூர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவளர்ச்சிபட்டி வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்டவையும் அகற்றப்பட்டன.

2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செம்பட்டு புதுத்தெருபகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது, அப்பகுதி பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றகூடாது என்றும், ஆக்கிரமிப்பை அகற்ற கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் வழங்கினார்கள். இந்தநிலையில் நேற்று காலை 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், இதற்காக சுமார் 10 பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக பொன்மலை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அப்துல் கபூர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, கார்த்திகா மற்றும் 50-க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story