திருத்தணி அருகே பஸ் கவிழ்ந்து 21 தொழிலாளர்கள் படுகாயம்


திருத்தணி அருகே பஸ் கவிழ்ந்து 21 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 6 Jan 2021 2:50 AM GMT (Updated: 6 Jan 2021 2:50 AM GMT)

திருத்தணி அருகே பஸ் கவிழ்ந்து 18 பெண்கள் உள்பட 21 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தனியார் துணி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த பஸ் ஒன்று தினந்தோறும் பள்ளிப்பட்டு, ஆந்திர மாநிலம் நகரி பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இந்த நிறுவனத்திற்கு செல்வது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று காலை இந்த பஸ் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு திருத்தணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சுரேஷ் ஓட்டிச்சென்றார். பஸ்சில் 38 தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.

21 தொழிலாளர்கள் படுகாயம்

அந்த பஸ் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற இடத்தில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சென்றபோது அங்கு இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பெண்கள் உள்பட 21 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story