சன்னாநல்லூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64 லட்சம் கடன் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
சன்னாநல்லூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64 லட்சம் கடன்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
நன்னிலம்,
அகரதிருமாளம் ஆகிய ஊராட்சிகளுக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சன்னாநல்லூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் கோபால், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடன்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீேலகா, கூத்தனூர் கூட்டுறவு வங்கி தலைவர் ராமகுணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய குழுதலைவர் சம்பத், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதயகுமார், கல்வி புரவலர்கள் பக்கிரிசாமி, சுவாதி, கோபால், நன்னிலம் கூட்டுறவுவங்கி தலைவர் மனோகரன், கங்களாஞ்சேரி கூட்டுறவு வங்கி துணை தலைவர் கார்த்திகேயன், கல்வி புரவலர் சாகேஸ்வரன் உள்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பேரளம்
இதேபோல் பேரளம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி பேரளத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கினார்.
Related Tags :
Next Story