திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கே சென்று பார்வையாளர் நேரில் ஆய்வு


திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கே சென்று பார்வையாளர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jan 2021 4:09 PM IST (Updated: 6 Jan 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்த பார்வையாளர் ஷோபனா நேரடியாக ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்,

சட்டமன்ற தேர்தலைெயாட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து தேர்தல் பணி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு கைவினை பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான ஷோபனா தலைமை தாங்கினார். கலெக்டர் சிவன்அருள் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா பேசியதாவது:-

திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு நடத்தப்பட்ட 4 முகாம்கள் மூலம் 45 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் நேரடியாகவும் இணையதளம் வாயிலாகவும் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் மீது வீடு வீடாகச் சென்று அலுவலர்கள் ஆய்வு செய்து 98 சதவீதப் பணிகளை முடித்துள்ளனர். இப்பணிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியான திட்டமிடல் மூலம் தேர்தல் பணிகளில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கிட கணக்கெடுக்கும் பணிகள் சிறப்பாக உள்ளது. தேர்தலில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் மாநில மத்திய அரசு அலுவலர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்குச்சாவடிகள் அதிகமாக்கப்படுவதற்கேற்ப பணியாளர்களை அதிகரிக்க வேண்டும்.

தேர்தல் பணியில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, துணை ஆட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வெங்களாபுரம் ஊராட்சியில் சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலர்கள் மூலமாக விசாரணை செய்து முடிக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பார்வையாளர் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டவரின் வீட்டுக்கே சென்று படிவத்தில் உள்ள நபர் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

Next Story