சேலத்தாம்பட்டி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு - ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சேலத்தாம்பட்டி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சேலம்,
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.வீ.ராஜூ, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், குழந்தை பெற்ற பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தையும் வழங்கினார்.
விழாவில், வெங்கடாஜலம் எம்.எல்.ஏ பேசும்போது, கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களது பகுதியிலேயே சிறந்த மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலத்தாம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இனிமேல் டவுன் பகுதிக்கு செல்வதை தவிர்த்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா மினி கிளினிக்கில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அவருக்கு அனைவரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளித்து அவரது கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும், என்றார்.
விழாவில், சேலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மல்லிகா வையாபுரி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கடாசலம், தமிழ்செல்வி மாதையன், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஓட்டுனர் அணி செயலாளர் கலைமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சற்குணம், கிளை செயலாளர்கள் அண்ணாமலை, பாபு, லட்சுமணன், குமார், பொன்னுமலை, கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story