நாகையில் சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்


நாகையில் சாராயம் கடத்திய 2 பேர் கைது கார் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jan 2021 8:57 AM IST (Updated: 7 Jan 2021 8:57 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த கார் நிற்காமல் சென்றது.

இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிளில் சென்று அந்த காரை முட்டம் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் காரை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலம் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

கார் பறிமுதல்

இதையடுத்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சங்கமங்கலத்தை சேர்ந்த ஜெகபர் சாதிக் (வயது40), வரிச்சுக்குடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) ஆகியோர் என்பதும், காரைக்காலில் இருந்து புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story