பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2021 8:59 AM IST (Updated: 7 Jan 2021 8:59 AM IST)
t-max-icont-min-icon

பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வதுநாளாக உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வதுநாளாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி மற்றும் 94 ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் சி.பி.ஆர். பிரிவில் பனங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 94 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இழப்பீடு வழங்க வேண்டும்

இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிந்த ஆலை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. பணி இழக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் முன்வர வில்லை. எனவே ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணியை விட்டு நிற்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story