கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு புதுக்கோட்டையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,

போராட்டத்திற்கு கூட்டமைப்பு கன்வீனர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலைவகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. மாவட்டத் தலைவர் ரெத்தினம், செயலாளர் கணபதி, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் கணேசன், டி.டி.எஸ்.எப். பொதுச் செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் பேசினர். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சுமார் ரூ.7 ஆயிரம் கோடியை அந்தந்த இனங்களில் உடனடியாக சேர்க்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஏப்ரல் 2019 முதல் பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும். பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வையும், நிலுவை தொகையையும் உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story