வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க.வினர், திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்


வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க.வினர், திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 8 Jan 2021 2:41 AM GMT (Updated: 8 Jan 2021 2:41 AM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் பா.ம.க. சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 5-ம் கட்டமாக இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனர். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வேணு பாஸ்கரன், மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் முகமது பாரி, மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மனோகரன், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனி, நகர தலைவர் நாகராஜ், மாவட்ட மகளிரணி தலைவி லலிதா குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் 20 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பா.ம.க. நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகத்திடம் மனு அளித்தனர்.

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி யானை கால் மண்டபத்திலிருந்து வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமையில் பா.ம.க.வினர்

ஊர்வலமாக பந்தலாடி, காந்தி சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மன்னார்குடி நகராட்சி ஆணையர் கமலாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் வீரராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனி.தனபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட அமைப்பு செயலாளர் லேனா செந்தில்குமார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செந்தில், வன்னியர் சங்க நகர தலைவர் கஜேந்திரன்,

நகர செயலாளர்அரவிந்தன், பா.ம.க நகரதலைவர் மோகன், செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி (பொறுப்பு) ஆணையர் சந்திரசேகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணிய ஐயர் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், கணேச கவுண்டர், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் சேகர், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் கல்விப்பிரியன் நீதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story