வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு கள்ளக்குறிச்சியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு கள்ளக்குறிச்சியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2021 10:50 AM IST (Updated: 8 Jan 2021 10:50 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத் தலைவர் கே.பி.பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், அய்யாக்கண்ணு, நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கராத்தேமணி வரவேற்றார். முன்னதாக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் இருந்து கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, நான்கு முனை சந்திப்பு, சேலம் மெயின் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் பேரணியாக வந்தனர். தொடர்ந்து அங்கு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.ராமு, மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தமிழரசன், மாவட்ட சமூக நீதி பேரவை செயலாளர் பழனிவேல், துணை செயலாளர் சிவராமன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சக்கரபாணி, மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் ராஜா, நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன், ஜவகர்லால், நகர அமைப்பு செயலாளர் நாராயணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story