ஆற்காடு அருகே, தனியார் நிறுவன ஊழியர் குத்திக்கொலை - அண்ணனுக்கு பார்த்த பெண்ணை காதலித்ததால் வாலிபர் வெறிச்செயல்


ஆற்காடு அருகே, தனியார் நிறுவன ஊழியர் குத்திக்கொலை - அண்ணனுக்கு பார்த்த பெண்ணை காதலித்ததால் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 8 Jan 2021 6:08 PM IST (Updated: 8 Jan 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே அண்ணனுக்கு பார்த்த பெண்ணை காதலித்ததால் தனியார் நிறுவன ஊழியரை குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். கூலித் தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 25). டிப்ளமோ முடித்து விட்டு ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சூர்யா அதே பகுதியில் உள்ள ஏரிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.

ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவின் தலை, கை மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சூர்யாவை, அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்துபார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சூர்யாவை குத்தி கொலைசெய்த நபரை ரத்தினகிரி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முப்பதுவெட்டி பகுதியை சேர்ந்த அஜய் (20) என்பது தெரியவந்தது. மேலும் அஜய்யின் அண்ணன் சுதாகர் என்பவருக்கு பார்த்த பெண்ணை, சூர்யா காதலித்து வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அஜய், சூர்யாவிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சூர்யாவை கத்தியால் குத்தியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story