முதல் கட்டமாக தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து செலவை ஏற்பதாக மத்திய அரசு உறுதி - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
முதல் கட்டமாக தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து செலவை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் முதல் கட்டமாக டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்தநிலையில் மாநிலத்தில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்த ஆகும் செலவை ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுடன் காணொலி காட்சி மூலம் பேசினேன். அப்போது கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த ஆகும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்போது அவர் முதல் கட்டமாக தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த ஆகும் செலவை மத்திய அரசு ஏற்கும் என உறுதி அளித்தார்.
நாங்கள் மாநில அரசு மற்றும் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு மருந்து மையங்களை அமைக்க உள்ளோம். 100 மையங்களை அமைத்தால், மையத்திற்கு 100 பேர் வீதம் சுகாதாரப்பணியாளர்களுக்கு 70 முதல் 80 நாட்களில் தடுப்பு மருந்தை செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story