5 ஆண்டுகளாக எதுவுமே செய்யாததை மறைக்க கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி நாடகம்; புதுச்சேரி அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு


அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.
x
அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.
தினத்தந்தி 9 Jan 2021 9:14 AM IST (Updated: 9 Jan 2021 9:14 AM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகளாக எதுவுமே செய்யாததை மறைக்க கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி நாடகமாடுகிறார்கள் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்
புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி செயலாளர் பி.ஆர். மூர்த்தி தலைமை தாங்கினார். குமுதன் புருஷோத்தமன், அவை தலைவர் சிவராமராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பாடுபடவேண்டும்.

புதுச்சேரியில் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. சட்டமன்ற அறிவிப்புகளையும் செயல்படுத்த முடியாத பலகீனமான ஆட்சி நடந்து வருகிறது.

உரிமைகள் இழப்பு
இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. கடனில்லா மாநிலமாக புதுச்சேரி மாநிலத்தை உயர்த்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது மாநில 
வளர்ச்சியை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.

மாநில அந்தஸ்து பெறுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு விருப்பு, வெறுப்பு அரசியலால் உரிமைகளை இழந்து வருகின்றனர்.

5 ஆண்டுகளாக எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு, அதை மறைக்க ஆட்சி முடியும் தருவாயில் கவர்னரை எதிர்த்து நாராயணசாமி போராட்டம் நடத்தி நாடகமாடுகிறார். இந்த ஆட்சி குறித்து மக்களிடம் அ.தி.மு.க.வினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தி புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரச் செய்ய வேண்டும்.

Next Story