அடைக்கலாபுரத்தில் தி.மு.க. மக்கள் கிராம சபை கூட்டம்; அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
x
தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
தினத்தந்தி 9 Jan 2021 10:21 AM IST (Updated: 9 Jan 2021 10:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவரும் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பு எழுதிய போர்டில் கையெழுத்து போட்டனர். கூட்டத்தில், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம், காயல்பட்டணம் நகர செயலாளர் முத்துமுகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். 

சங்க செயலாளர் சத்தியதாஸ் வரவேற்று பேசினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.6¼ லட்சம் கடன் உதவி வழங்கினார்.

வங்கி மேலாளர் முத்துவேல் பெருமாள், வங்கி இயக்குனர்கள் குமார், சுலோச்சனா, தேவமாதா, ராஜகோபால், ஆனந்தபாய், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story