தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 52 மி.மீ. மழை நெல், நிலக்கடலை பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 52 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக நெல், நிலக்கடலை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இன்னும் டெல்டா மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. ஏற்கனவே நிவர், புரெவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள், நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் தற்போதும் மழை நீடித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
பலத்த மழை
தஞ்சையில் நேற்று நள்ளிரவில் 12.45 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் லேசான தூறலுடன் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதே போல் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை இன்றி காணப்பட்டது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளிக்கிறது.
இந்த மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தும், சாய்ந்த பயிர்களில் இருந்து நெல்மணிகள் முளைத்தும் காணப்படுகின்றன. ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நெல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதே போல் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களிலும் முளைக்கும் தருவாயில் இருந்த விதைகள் தொடர்மழையினால் அழுகி காணப்படுகிறது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மழை அளவு
எனவே தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கணக்கெடுத்து உரிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேராவூரணி 52, பட்டுக்கோட்டை 48, குருங்குளம் 44, வல்லம் 36, ஒரத்தநாடு 31, அதிராம்பட்டினம் 30, ஈச்சன்விடுதி 30, மதுக்கூர் 29, அய்யம்பேட்டை 26, நெய்வாசல் தென்பாதி 25, மஞ்சளாறு 24, வெட்டிக்காடு 16, தஞ்சை 14, திருவிடைமருதூர் 8, பாபநாசம் 4, திருக்காட்டுப்பள்ளி 3, கும்பகோணம் 3, கல்லணை 1, திருவையாறு 1.

Related Tags :
Next Story