திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வெல்டிங் தொழிலாளி கைது


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வெல்டிங் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Jan 2021 4:40 PM IST (Updated: 10 Jan 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமம் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 23). லேத் பட்டறையில் வெல்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வெல்டிங் தொழிலாளி கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கைதான கார்த்திகேயன் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

16 வயது சிறுமியை வெல்டிங் தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சிறுவாச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story