ஜோலார்பேட்டை அருகே, போதையில் நடந்து சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு


ஜோலார்பேட்டை அருகே, போதையில் நடந்து சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 10 Jan 2021 1:15 PM GMT (Updated: 10 Jan 2021 1:15 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே போதையில் நடந்து சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி, பி.கே.வட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மவர்மன் (வயது 61). இவர் சென்னை - பெங்களூரு இடையே இயங்கும் டபுள் ெடக்கர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் உள்ள கேன்டீனில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு பகுதியில் வெளியில் இருப்பதாலும், மனைவி இறந்துவிட்டதாலும் நரசிம்மவர்மன் மட்டும் தனியாக வசித்து வந்தார். நரசிம்மவர்மனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் மது அருந்திவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பாராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டின் அருகே உள்ள ஜெயபால் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நரசிம்மவர்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இவரது மகன் பிரமோத் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சித்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் விசாரணையில் இறந்த முதியோர் கடந்த 3 நாட்கள் முன்பு கிணற்று வழியாக வீட்டிற்கு மது போதையில் செல்லும் போது தவறி விழுந்தது தெரியவந்துள்ளது.

Next Story