சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2021 9:05 PM IST (Updated: 10 Jan 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார்.. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், சிங்கராயர், ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்க்ீட்டை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இ்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ்மாவட்ட பொருளாளர் குமரேசன், மாவட்ட துணைத்தலைவர் அமலசேவியர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார், வட்டாரச்செயலாளர்கள் கணேசன், சுரேஷ், ஆரோக்கியசாமி, முத்துமாரியப்பன், சரவணன், ரமேஷ்குமார், லெவே ஜோசப்துரை, சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story