மாவட்ட செய்திகள்

கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு + "||" + Karnataka cabinet expansion tomorrow; Chief-Minister Eduyurappa's announcement

கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள்(புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மந்திரிசபை
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. எடியூரப்பாவின் மந்திரி சபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா முயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களையும் சந்தித்து வந்தார். ஆனால் இடைத்தேர்தல், கிராம பஞ்சாயத்து தேர்தல் உள்பட பல்வேறு காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் திடீரென முதல்-மந்திரி எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்தது. அதன்பேரில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம், கர்நாடகத்தில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மேலிட தலைவர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாக கூறப்படுகிறது.

நாளை மறுநாள் விரிவாக்கம்
இந்த சந்திப்புக்கு பின் நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவை வந்தடைந்தார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந் தேதி(நாளை மறுநாள்) மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பாடுகள். மந்திரிகளாக பதவி ஏற்பவர்கள் யார், யார் என்ற பெயர் பட்டியல் நாளை(அதாவது இன்று) அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் உள்ளதா? எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி
சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் எடியூரப்பாவுக்கு உள்ளதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
2. கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம் 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர் கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிதாக 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
3. கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம்; 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்
கர்நாடக மந்திரிசபை 4-வது முறையாக விரிவாக்கம்; 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்
4. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதகா எடியூரப்பா கூறினார்.
5. பா.ஜனதா மேலிடம் திடீர் அழைப்பு; முதல்-மந்திரி எடியூரப்பா இன்று டெல்லி பயணம்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தலைவர்களுடன் ஆலோசனை
பா.ஜனதா மேலிடத்தின் திடீர் அழைப்பை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அவர், தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.