திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் + "||" + Liberation Tigers of Tamil Eelam (LTTE) road blockade condemning Gayatri Raghuram for criticizing Thirumavalavan
திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
திருமாவளவன் பற்றி விமர்சித்த பாரதீய ஜனதா கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை வண்டிப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவோணம் அருகே கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது