திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி + "||" + Free bicycle program at Tirukovilur Government Girls High School
திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான கே.சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமை தாங்கி 624 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மணி, நகர துணை செயலாளர் ராணி, நகர பொருளாளர் ஷபி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி, கூட்டுறவு வங்கி இயக்குனர் அன்பரசன், நகர பாசறை செயலாளர் பாலு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14 ஆயிரத்து 161 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.