கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்


கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jan 2021 4:19 AM GMT (Updated: 11 Jan 2021 4:19 AM GMT)

கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,.

கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி விழுப்புரம் ஜானகிபுரத்தில் நடைபெற்றது. இதற்கு கோலியனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டி மேடு ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், விழுப்புரம் நகர இளைஞரணி செயலாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

பரிசு

இந்த கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் காணிப்பாக்கம், வேளியம்பாக்கம், கண்டமானடி, ஜானகிபுரம், பிடாகம், கண்டம்பாக்கம், அரியலூர், கொளத்தூர், மரகதபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 28 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 17-ந்தேதி பரிசு வழங்கப்படும். விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் கண்டமானடி ராஜ் மஞ்சுளா, சசிகுமார் , ஜெயக்குமார், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் சுந்தர்ராஜ், விவசாய அணி செயலாளர் கலுவு, ஒன்றிய மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், ஒன்றிய பொருளாளர் தனசேகர், சிறுபான்மை பிரிவு செயலாளர் கமாலுதீன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் தமிழ் கருணாமூர்த்தி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் அழகேசன், நிர்வாகிகள் சரவணன், பார்த்திபன், ஸ்ரீராம், நிவேஷ் குமார், குமரவேல், வேட்டை ராமதாஸ், விஜயசாரதி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story