மாவட்ட செய்திகள்

பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டம் + "||" + The plan is to complete the construction of a new railway bridge over the Pamban Sea by 2023

பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டம்

பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டம்
பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்காலிகமாக நிறுத்தம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வந்ததால் பாம்பன் கடலில் நடைபெற்றுவந்த புதிய ெரயில் பால பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் குறைந்த நிலையில் 3 மாதத்திற்கு பிறகு மீண்டும் புதிய ெரயில் பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மீண்டும் கடலுக்குள் இரும்பினாலான இரண்டு மிதவைகள் நிலை நிறுத்தப்பட்டு அதன் மீது அதி நவீன எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் மூலம் கடலுக்குள் புதிய பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இருவழிப்பாதை
2023-ம் ஆண்டிலேயே புதிய ெரயில்பால பணிகள் முழுமையாக முடிவடையும் என்று கூறப்படுகின்றது. பாம்பன் கடலில் அமைய உள்ள புதிய பாலத்திற்காக கடலுக்குள் 333 தூண்கள் அமைக்கப்பட உள்ளது.

புதிய ெரயில் பாலத்தில் அனைத்து ெரயில்களும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதுடன் மின்சார ெரயில்களும் செல்லும் வகையில் இரு வழிப்பாதை பாலமாக புதிய பாலம் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.